மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
Published on
Updated on
1 min read

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: F.No. E/16/2025-C-2

தேர்வின் பெயர்: SSC-Stenographer Grade 'C' and 'D' Exam - 2025

காலியிடங்கள்: 261

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குரூப் 'டி' பிரிவிற்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், குரூப் 'சி' பிரிவிற்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிப்பதுடன் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம், 50 கிலோ எடையும், மார்பளவு சாதாரண நிலையில் குறைந்தது 75 செ.மீ அகலமும், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளும், குரூப் 'டி' பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி நடத்தும் ஆன்லைன் சுருக்கெழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சுருக்கெழுத்து எழுத்தும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: 6.8.2025 - 11.8.2025

தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் , சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெறத் தேவையான தகுதிகள் போன்ற விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com