ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவ வெடி மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் ஆபத்து கட்டடத் தொழிலாளர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்ரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள இந்திய ராணுவ வெடி மருந்து உற்பத்தி தொழிற்சாலை
மகாராஷ்ரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள இந்திய ராணுவ வெடி மருந்து உற்பத்தி தொழிற்சாலை
Published on
Updated on
1 min read

மகாராஷ்ரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள இந்திய ராணுவ வெடி மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் வெடிப்பொருள்கள், ரசாயனங்கள் அல்லது அபாயகரமான பொருள்களுடன் பணிபுரியக் கூடிய பணிக்கால அடிப்படையிலான ஆபத்து கட்டடத் தொழிலாளர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர எண்: 2544/Per(IV)/OFCH/Tenure DBW/02/2025

பணி: Tenure Based DBW

காலியிடங்கள்: 135

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Attendant Operator Chemical Plant(AOCP) டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி, என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், ஷீட் மெட்டல் தொழிலாளி, எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பாய்லர் அட்டெண்டண்ட், மெக்கானிக் இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக், ஏசி மெக்கானிக் போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 + நாள்படி

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.munitionsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief General Manager, Ordnance Factory, Chanda District, Chandrapur, Maharashtra - 442501

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 1.7.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com