
மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ரப்பர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 40 களப் பணியாளர்(Field Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Officer
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 1.1 2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitments.rubber board.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.