சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவி விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்தக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் குறைந்தது பத்தாண்டுகள் குற்றவியல் வழக்குகளில் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவா், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.