அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. நா்ஸிங் தோ்ச்சி பெற்ற 35 வயதுக்கு உள்பட்ட பெண் செவிலியா்கள் தேவைப்படுகின்றனா். டேட்டா ஃபுளோ, ஹெச்ஆா்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பணியாளா்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இவர்களுக்கான நேர்காணல் வருகிற 27.4.2025 முதல் 30.4.2025 வரை கொச்சியில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பித்துவிட்டீர்களா? ஜிஎஸ்டி கேன்டீனில் உதவியாளர் பணி

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பாா்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஊதியம், பணி விவரங்கள் குறித்த தகவல்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் 63791-79200, 044-22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்து தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்விச்சான்றிதழ் பாஸ்போட் அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18.04.2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னஞ்சலில் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜன்டுகளோ கிடையாது. விண்ணப்பத்தாரா்கள் நேரிடையாகப் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொருத்து முன்னுரிமை வழங்கப்படும். இப்பணிக்குத் தோ்வு பெறும் பணியாளா்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக ரூ. 35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com