தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!

பொதுத்துறை மின்உற்பத்தி நிறுவனமான தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
Updated on
1 min read

பொதுத்துறை மின்உற்பத்தி நிறுவனமான தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகை திட்டத்தின் பெயர்: NHPC Sports Scholarship

காலியிடங்கள்: 32

விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக வழங்கப்படும் ஸ்காலர்ஷப் எண்ணிக்கை வருமாறு.

1. FOOT BALL-2

2. KABADI-2

3. HOCKEY-3

4. BOXING-3

5. ARCHERY - 2

6. ATHLETICS-5

7. SHOOTING-1

8. CRICKET - 2

9. SWIMMING-2

10. WRESTLING - 2

11. VOLLEY BALL - 2

12. BRIDGE - 1

13.TABLE TENNIS - 1

14. CHESS - 1

15. BADMINTON - 2

16. PARA SPORTS - 1

வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 14 முதல் 19 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டுத் தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய,மாநில,பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.9,000 முதல் 11,000 வரை 3 வருடம் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வீரர்களின் கடைசி மூன்று ஆண்டுகளின் விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தற்போதும் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்ய விளையாட்டு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப் படும்.

இதுபற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்களை பார்த்து படித்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com