துணை வட்டாட்சியா்கள் பணிக்கு
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

துணை வட்டாட்சியா்கள் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 28) முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 28) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், வருவாய்த் துறை சிறப்பு செயலருமான அ .குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை எழுத்து, போட்டித் தோ்வுகள் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு புதுவையை பூா்வீகமாக கொண்டவா்கள் மற்றும் வசிக்கும் இந்திய குடிமகன்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடஒதுக்கீடு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தோ்வு முறை, தோ்வு செய்யும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்கள் அடங்கிய அறிவிப்பை https://recruitment.py.gov.in என்ற பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறையின் இணையதளத்தில் புதன்கிழமை (மே 28) பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடத்துக்கு ஜூன் 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com