டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

நாமக்கல்: நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், கணினி தரவு பதிவாளா் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், புரட்சித்தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள கணினி தரவு பதிவாளா் ஒரு பணியிடத்தில் மாதம் ரூ. 14 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக ஓராண்டுக்கு பணிபுரிய தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகளாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிணியில் எம்.எஸ்.ஆபீஸ் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

இந்த பணியிடம் முற்றிலும்தற்காலிகமானது. இதற்கான விண்ணப்பத்துடன், உரிய கல்விச்சான்று மற்றும் அனுபவச் சான்றுகளை இணைத்து நவ.17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய கூடம், அம்மா பூங்கா எதிரில், வகுரம்பட்டி(அஞ்சல்), நாமக்கல் மாவட்டம்-637002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com