

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்று தகுதிகள் குறித்து பார்ப்போம்:
பணி: Health Inspector
காலியிடங்கள்: 1,429
தகுதி: உயிரியல் அல்லது, விலங்கியல், தாவரவியல் பாடங்கள் கொண்ட அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அடிப்படையில் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இரண்டு ஆண்டு பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்), சுகாதார ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம்: ரூ.19,500 – 71,900
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எந்த சமூகத்தினருக்கும் வயதுவரம்பு இல்லை.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.300, இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு அடிப்படையில் நடத்தப்படும் தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த கட்டத்திற்கு கணினி வழித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் கரோனா பணிக்கான ஊக்க மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.11.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.