

சென்னையில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் காலியாகவுள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: மைய நிர்வாகி(Centre Administrator)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர், மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 ஆண்டு அனுபவம் பெற்றவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி
பணி: மூத்த ஆலோசகர்(Senior Counselor) - 5
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.22,000
தகுதி: சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி
பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர்(IT Administrator)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி
பணி: வழக்கு பணியாளர்கள்(Case Worker)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: சமூகப் பணியில் இளங்கலை பட்டம் மற்றும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி
பணி: பாதுகாப்பாளர்( Security Guard)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனங்களில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி
பணி: பன்முக உதவியாளர்(Multipurpose Helper)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். சமையில் மற்றும் அலுவலகத்தை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி
மேற்கண்ட பணியிடங்களுக்கு உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் தபால் மூலம் தகுதியானவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சலில் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.11.2025
மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.