

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் ரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு 3 மேற்பார்வையாளர், 3 வழக்கு பணியாளர் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு 1 மேற்பார்வையாளர் என 7 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பெண்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேற்பார்வையாளர்(Supervisor)
காலியிடங்கள்: 4(3+1)
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமூகப் பணி,கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சமூகவியல், சமூகவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வழக்கு பணியாளர்(Case Worker)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2- ஆவது குறுக்குத் தெரு(மாடி), எஸ்பிஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம்(அஞ்சல்), திண்டுக்கல் - 624 004. தொலைபேசி எண்: 04512904070
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து கடைசி நாள்: 24.11.2025.
மேலும், கூடுதல் விவரம் பெற www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.