
திருச்சியிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் கற்றல் வளம்(Learning Resource) மையத்தால் வழங்கப்படும் நூலகர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: IIMT/LIB/TRA/2025/02
பணி: Library Trainee
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயது வரம்பு : 10.10.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறையின்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: நூலகம் மற்றும் தகவல் அறிவியல்(Library and Information Science)பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி 12 மாதங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டுள்ள விண்ணப்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2025
எழுத்து மற்றும் நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.