
மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 474 பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்கு தேர்வு செய்யப்பேடுவோர் மத்திய அரசில் உள்ள குரூப் ஏ, பி சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு அறிவிப்பு எண்.: 02/2026
தேர்வு பெயர்: UPSC Engineering Service Examination 2026
மொத்த காலியிடங்கள்: 474. காலியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.
தகுதி: மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ இயற்பியல், ரேடியோ பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.1996 முன்னரும், 1.1.2005-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதி முறைப்படி தளர்வு வழங்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு 35 வயதுவரை தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் 200 மதிப்பெண்களுக்கானது. இது பொது அறிவு மற்றும் நுண்ணறிவு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இரண்டாம் தாள் அந்தந்த பொறியியல் பிரிவிற்கானது. இது 300 மதிப்பெண்களுக்கானது. இதில் தேர்ச்சி அமைந்திருக்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுவும் 2 தாள்களைக் கொண்டது. இரண்டு தாள்களும் சம்மந்தப்பட்ட பாடம் சார்ந்ததாக இருக்கும். மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான தேர்வு. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2026
தமிழ்நாட்டில் தேர்வு நடை பெறும் இடங்கள்: சென்னை. மதுரை.
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு நுழைவுச் சீட் தேர்வு தொடங்கும் தேதியில் இருந்து 3 வாரங்களுக்கு முன்பாக யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். அங்கிருந்து தேர்வர்கள் தங்களுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம்.
மேலும், எழுத்துத்தேர்விற்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரங்கள் இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.10.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.