
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
அறிவிப்பு எண்.: CB/AT/2025
பணி: Graduate Apprentice
மொத்த காலியிடங்கள்: 3,500 (இதில் தமிழ்நாட்டிற்கு 394).
உதவித்தொகை: மாதம் ரூ. 15,000
வயது வரம்பு: 1.9.2025 தேதியின் 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 10, +2, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
10 அல்லது +2-வில் தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள் தவிர இதர பிரிவினர்கள் தமிழகத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில் தமிழ் மொழித்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களுடைய பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவும். நேர்முகத்தேர்வுக்குரிய அழைப்பு கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் சமர்ப் பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் 5 5.500. SC/ST/PWD पी னர்களுக்கு விண்ணப்பக் கட் டணம் கிடையாது. விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் முறை யில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி விபரங்களை www.nats.educa tion.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பின்னர் www.canarabank.bank.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.10.2025
மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் இணையதளத் தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.