
மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 7,267 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகள் அல்லது பி.எட்., எம்.எட்., நர்சிங் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் என்பது பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கு கல்வி, உணவு மற்றும் தங்குமிடங்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7,267 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
முதல்வர் - 225, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் -1,460, பட்டதாரி ஆசிரியர் - 3,962, பட்டதாரி செவிலியர் - 550, விடுதிக்காப்பாளர் - 635, இளநிலை செயலக உதவியாளர் - 228, கணக்காளர் - 61 மற்றும் ஆய்வக உதவியாளர் - 146.
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, பு, இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகள் அல்லது பி.எட்., எம்.எட்., செவிலியர் போன்ற சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான கல்வித் தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: முதல்வர் பதவிக்கு 50 வயதுக்குள்ளும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 40 வயதுக்குள்ளும், விடுதிக்காப்பாளர் பணிக்கு 35 வயதுக்குள்ளும், மற்ற பதவிகளுக்கு பொதுவாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் அரசு விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினர்களுக்கு தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://nesms.tribal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.10.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.