விண்ணப்பித்துவிட்டீர்களா..? அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை!

நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் உள்ள கார்பைட் வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணி
விண்ணப்பித்துவிட்டீர்களா..?  அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் உள்ள கார்பைட் வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுபற்றிய விபரம் வருமாறு:

பணி: Tenure Based CPWL

காலியிடங்கள்: 77 (UR-34, OBC-20, SC-11, ST-5, EWS-7)

வயது வரம்பு : 10.9.2025 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

சம்பளம் : மாதம் ரூ. 19,000 + டிஏ

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி, என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி அல்லது பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு. சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் தகுதி, வயது, சாதி மற்றும் ஐடிஐ படிப்பிற்குரிய அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://munitionsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மீது பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager, Cordite Factory Aruvankadu, The Nilgris District, Tamil Nadu - 643 202.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 10.9.2025

Summary

Applications are invited from the candidates of the following trades for engagement as Tenure based CPW Personnel on CONTRACT BASIS, to work at Cordite Factory, Aruvankadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com