
ரயில்வே மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பாரா மெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்ளிடம் இருந்து செப்.18-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
அறிவிப்பு எண். : 03/2025
மொத்த காலியிடங்கள் : 434
பணி: Nursing Superintendent
காலியிடங்கள்: 272
தகுதி : General Nursing and Midwifery பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது Nursing பாடப்பிரிவில் இளநிலை பட்டப்ப டிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Dialysis Technician
காலியிடங்கள்: 4
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் Dialysis Technician இல் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 20 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Health & Malaria Inspector Gr. III
காலியிடங்கள்: 33
தகுதி: வேதியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று Health Inspector, Sanitary Inspector படிப்பில் ஒரு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 105
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Radiographer X-Ray Technician
காலியிடங்கள்: 4
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் X-Ray Technician, Radio diag-nosis Technology-இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 19 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: ECG Technician
காலியிடங்கள்: 4
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Cardiology, ECG Laboratory Technology, Cardiology Technician பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Laboratory Assistant Grade II
காலியிடங்கள்: 12
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் எம்எல்டி டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.1.2026 தேதியின்படி18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் பாரா மெடிக்கல் பணி தொடர்பான திறனறிவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் General Awareness, General Arithmetic, General Intelligence and Reasoning, General Science பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, திருநங்கை பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.9.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.