
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாண் இயக்குநா்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பணிமனைகளில் தொழிற்பழகுநா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த தொழிற்பழகுநா் பயிற்சி பெற தகுதியான பொறியியல் பட்டம் (முதல் வகுப்பு), பட்டயப்படிப்பு (இயந்திரவியல்/ தானியியங்கியல்/ மின், மின்னணுவியல்), பட்டப்படிப்பு (கலை /அறிவியல் /வணிகவியல்) 2021, 2022 , 2023 ,2024 மற்றும் 2025 ம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் https://nats.education.gov.in இணையதள முகவரியில் உரிய சான்றிதழ்களுடன் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.