
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Grade-A(Assistant Manager)
பிரிவு: General
காலியிடங்கள்: 12
தகுதி: புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகம்(நிதி), பொருளாதாரவியல் ஆகிய ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ, சிஎப்ஏ, சிஎஸ், ஐசிடபுள்யுஏ -இல் இளநிலை அல்லது சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Legal
காலியிடங்கள்: 4
தகுதி: சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Information Technology
காலியிடங்கள்: 4
தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது கம்பியூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.62,500 - 1,26,100
வயதுவரம்பு: 25.9.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு நிலை I மற்றும் நிலை II என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ifsca.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.