
திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்படி மாவட்ட சுகாதார நலச்சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் ஆலோசகர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Consultant
1. Yoga and Naturopathy
காலியிடங்கள்: 6
தகுதி: BNYS-இல் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Ayurveda
காலியிடம்: 1
தகுதி: BAMS-இல் இளநிலை மருத்துவம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Unani
காலியிடம்: 1
தகுதி: யுனானி மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Homoeopathy
தகுதி: ஒமியோபதி பிரிவில் இளநிலை மருத்துவம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: Attender, Multipurpose Hospital Worker
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரு.10,000
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Therapeutic Assistant (Male & Female)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.13,000
வயது வரம்பு: 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Nursing Therapy-இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://dindigul.nic.in/notice category/recruitment இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
நிர்வாக உறுப்பினர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் -624 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 29.9.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
District Health Society – Ayush – Contract Based – Vacancy Notification
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.