
சென்னை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: AVNLCO/HR/2025/08
மொத்த காலியிடங்கள்: 12
பணி: Junior Manager
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயது வரம்பு: 27.9.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: Manager
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி : பொறியியல் துறையில் CSE, IT, Cyber Security, Artificial Intelligence ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது எம்இ முடித்திருக்க வேண்டும் அல்லது பிசிஏ, எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27.9.2025 தேதியின்படி 50-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி, இடபுள்யுஎஸ், பெண்கள் பிரிவினர் தவிர இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பி வங்கி மூலமாக வங்கி வரைவோலையாக (டி.டி) எடுத்து அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி : "AVNL Ltd., Chennai".
விண்ணப்பிக்கும் முறை: www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, CO & HR, Armoured Vehicles Nigam Limited, HVF Road, Avadi, Chennai - 600 054.
விண்ணப்பிக்கும் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் விளம்பர எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 27.9.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.