
பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரம் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Recruitment)
பிரிவு: Forex
காலியிடங்கள்: 24
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்று Foreign Exchange, Trade Finance-இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Legal
காலியிடங்கள்:14
தகுதி: சட்டப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Chartered Accountant
காலியிடங்கள்: 6
தகுதி: சிஏ முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: IT Infrastructure
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் Computer Science, Information Technology, Electronics, Electrical & Electronics, Electronics & Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Database Administrator
காலியிடங்கள்: 7
தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science, Electronics and Communications, Electronics and Telecommunication, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Mobile App Developer
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science, Electronics and Communications, Electronics and Telecommunication போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Unix Linux
காலியிடங்கள்: 5
தகுதி : Information Technology, Computer Science, Electronics and Communications, Electronics and Telecommunications, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 22 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960
பணி: Senior Manager (Recruitment)
1.Legal
காலியிடங்கள்: 10
தகுதி: சட்டப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.Risk
காலியிடங்கள்: 20
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Risk Management-இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280
வயதுவரம்பு: 25 முதல் 38-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.118 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bankofmaharashtra.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.