மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரயில்வே சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஒரு 'நவரத்னா' பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய ரயில்வேயில் உணவக சேவைகளை மேம்படுத்துவதற்கும், நாட்டில் ரயில் சார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட நிறுவனமாகும். ரயில்வேயின் ஒரு விரிவாக்கம் செய்யப்பட்ட பிரிவாக 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நிறுவப்பட்டதன் நோக்கம், ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் உணவக சேவைகளை மேம்படுத்துதல், தொழில்மயமாக்குதல் மற்றும் நிர்வகித்தல், அத்துடன் உணவுகள், சிறப்பு சுற்றுலா திட்டங்கள், வணிக விளம்பரம் மற்றும் உலகளாவிய முன்பதிவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்துவதாகும். புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.250 கோடி, செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.160 கோடி. இந்நிறுவனத்தில் தற்போது 43 ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் (Hospitality Monitors) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள 43 ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 17.2.2026 முதல் 5.3.2026 வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
அது குறிந்த விவரங்களை பார்ப்போம்...
விளம்பர எண். 2026/IRTC/WZ/HRD/Contractural/Hospitality Monitor
பணி: Hospitality Monitors(IRTC/WEST ZONE)
காலியிடங்கள்: 43
வயதுவரம்பு: 21.1.2026 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,00 + தினப்படி ரூ. 350 + எச்ஆர்ஏ
தகுதி: Hospitality & Hotel Management, Culinery Arts, Catering Science, Tourism போன்ற படிப்புகளில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி, பிபிஏ, எம்பிஏ முடித்திருக்க வேண்டும். ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2024 ஆம் ஆண்டிற்கு முன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.2.2026 முதல் 5.3.2026 வரை நடைபெறும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், முகவரி, தேதி ஆகியவற்றை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
IRCTC invites Eligible and Qualified candidates to appear for walk-in-interview for engagement as ‘Hospitality Monitors’ on Contract basis for a period of 2 years initially and extendable for one (01) year based on requirement and satisfactory performance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்! அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்!

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பாதுகாவலர், ஆபரேட்டா் பணி!

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




