சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

காஞ்சிபுரத்தில் பிப். 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ...

News image

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோப்புப்படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. பட்டதாரிகள், பட்டயதாரிகள், ஐடிஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் இதில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

எனவே 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.