

மத்திய அரசின்பொதுத்துறை நிறுவனங்களான நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (என்எஃப்எல்), இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (இஐஎல்) மற்றும் நாட்டின் முதல் பொதுத்துறை உர நிறுவனமான ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எஃசிஐஎல்) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான ராமகுந்தம் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனம் (ஆர்எஃப்சிஎல்) தெலங்கானா மாநிலம், பெத்தபள்ள மாவட்டம் ராமகுந்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள்: 36
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General Manager (E‐8) - 1
பிரிவு: கெமிக்கல் - 10
பணி: Assistant Manager (E‐2) - 5
பணி: Deputy Manager (E‐3) - 2
பணி: Manager (E‐4)- 1
பணி: Chief Manager (E‐6) - 1
பணி: Deputy General Manager(E‐7) - 1
பிரிவு: மெக்கானிக் - 3
பணி: Assistant Manager (E‐2)- 2
பணி: Manager (E‐4)- 1
பிரிவு: இன்ஸ்ட்ருமென்டேசன் - 4
பணி: Deputy Manager (E‐3)-2
பணி: Senior Manager (E‐5)-1
பணி: Deputy General Manager (E‐7)-1
பிரிவு: சிவில் - 1
பணி: Chief Manager (E‐6)- 1
பிரிவு: கெமிக்கல் லேப் - 2
பணி: Assistant Manager (E‐2)-2
பிரிவு: மெட்டீரியல்
பணி: Assistant Manager (E‐2)- 5
பிரிவு: மனிதவள மேலாண்மை(எச்.ஆர்)
பணி: Assistant Manager (E‐2) - 5
பிரிவு: போக்குவரத்து
பணி: Senior Manager (E‐5) - 1
பிரிவு: பார்மசி - 1
பணி: Assistant Manager (E‐2) - 1
பிரிவு: நிதி மற்றும் கணக்கியல்
பணி: Assistant Manager (E‐2) - 1
பணி: Chief Manager (E‐6) - 1
பிரிவு: தகவல் தொழில்நுட்பம்(ஐ.டி)
பணி: Assistant Manager (E‐2) - 1
சம்பளம்: E‐2 பணிகளுக்கு மாதம் ரூ.50,000 - 1,60,000, E‐3 பணிகளுக்கு மாதம் ரூ.50,000 - 1,80,000, E‐4 பணிகளுக்கு மாதம் ரூ.70,000 - 2,00,000, E‐5 பணிகளுக்கு மாதம் ரூ.80,000 - 2,20,000, E‐6 பணிகளுக்கு மாதம் ரூ.90,000 - 2,40,000, E‐7 பணிகளுக்கு மாதம் ரூ.1,00,000 - 2,60,000, E‐8 பணிகளுக்கு மாதம் ரூ.1,20,,000 - 2,80,000.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.எஸ்சி(வேதியியல்), சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக 40, 45, 50, 55 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rfcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager (HR), RFCL, Corporate Office, 4th Floor, Wing - A, Kribhco Bhawan, Sector 1, Noida, Uttar Pradesh - 201 301.
விண்ணப்பக் கட்டணம்: E‐2 முதல் E‐4 பணிகளுக்கு ரூ. 700, E‐5 முதல் E‐8 பணிகளுக்கு ரூ. 1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.1.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.