பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை டெலிகாம் அதிகாரி வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள 198 இளநிலை டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை டெலிகாம் அதிகாரி (JUNIOR TELECOM OFFICER (CIVIL & ELECTRICAL)
காலியிடங்கள்: 198
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/srd_jto_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.03.2019