இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.18) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தனியாா் நிறுவனங்களும்-தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
அதன்படி, இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், செவிலியர், பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அயோத்தி நன்கொடை திருட்டு! நாடாளுமன்றத்தில் ராகுல் நூதன போராட்டம்!

சென்னையில் போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்க முயற்சி: கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!
தவறான வாட்ஸ் ஆப் தகவலைப் பரப்பும் மு.க. ஸ்டாலின்: அமைச்சர் நிர்மல் குமார்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



