விண்ணப்பித்துவிட்டீர்களா..? 245 சிவில் நீதிபதி காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
By DIN | Published On : 02nd June 2023 01:28 PM | Last Updated : 02nd June 2023 01:28 PM | அ+அ அ- |

தமிழ்நாடு நீதித்துறையில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதம் 28, 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: சிவில் நீதிபதி(Civil Judge)
காலியிடங்கள்: 245
சம்பளம்: மாதம் ரூ. 27,700 - 44,770
தகுதி: முதல்நிலைத் தேர்வுக்கு சட்டத் துறையில் புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்: 22 முதல் 29க்குள் இருக்க வேண்டும். வழக்குரைஞர்கள் 25 முதல் 37க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் விவரம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத்த தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200.
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...