துணை ராணுவத்தில் துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்பி அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது.
துணை ராணுவத்தில் துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்பி அறிவிப்பு


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சாஸ்த்ரா சீமா பால் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: Sub-inspecter (Pioneer)
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு ஆட்டோகேட் இல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter (Draughtsman)
காலியிடங்கள்: 59
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பட்டம், பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Sub-inspecter Female (staff nurse)
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது நர்சிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 -1,12,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவர். 

கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.6.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com