விண்ணப்பிக்கலாம் வாங்க... தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 18 மேலாளர்(நிர்வாகம்), உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம் வாங்க... தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!
Updated on
1 min read


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 18 மேலாளர்(நிர்வாகம்), உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 
பணி: Manager(Administration)- 12 
பணி: Manager(Legal) - 2 
சம்பளம்: மாதம் ரூ. 15,600 – 39100

பணி: Assistant Manager (Legal)-4 
சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும்  குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.01.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com