
சபரிமலை விவகாரத்தை பிரசாரம் செய்யக்கூடாது என கேரள தேர்தல் தலைமை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கேரள தலைமை தேர்தல் ஆணையர் டீகா ராம் மீனா கூறுகையில்,
சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று அம்மாநில அரசியல் கட்சிகளுடனான கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார். மதம், சாதி உள்ளிட்டவை குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது, சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சிப்பது உள்ளிட்டவை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் கேரளாவில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.