2020-ஆம் ஆண்டு அற்புதமாய் அமைய வாழ்த்துகள்! பிரதமர் மோடி

2020-ஆம் ஆண்டு அனைவருக்கும் அற்புதமாய் அமைய வாழ்த்துக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டு அற்புதமாய் அமைய வாழ்த்துகள்! பிரதமர் மோடி

அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்து கூறி பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 

2019-ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக நிறைவடைந்துள்ளது. மாற்றவே முடியாது என்று எண்ணியவற்றை நாம் மாற்றினோம். 2020 பிறந்து விட்டது. இந்த ஆண்டிலும், வலிமை மிகுந்த இந்தியாவை உருவாக்க மக்கள் அனைவரும் முயற்சிப்பாா்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களின் முன்னேற்றத்துக்கான ஆண்டாக 2020-ஆம் ஆண்டு அமையும். 

2020-ஆம் ஆண்டு அனைவருக்கும் அற்புதமாய் அமைய வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவும், லட்சியங்கள் நிறைவேறவும், அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com