சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் ஒரு சங்கமமாக கோவில் நகரான குன்றத்தூர் விளங்குகிறது. இங்கு சுப்ரமணிய சுவாமியின் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் அடிவாரத்தில் மகாவிஷ்ணு ஊரகப் பெருமாளாக எழுந்தருளியுள்ளார். தாயார் திருவிருந்தவல்லி ஆவர். இங்கு பிரகாரத்தில் லக்ஷ்மணருடன் கூடிய கல்யாண ராமர் சன்னதியும் உள்ளது. தனித்தனியே ஆஞ்சநேயர் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் உள்ளது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். படங்கள் உதவி: TUT ராகேஸ்