திருநாங்கூரில் நடைபெற்ற 11 கருட சேவை

சீர்காழி  அருகிலுள்ள திருநாங்கூரில் 11 திவ்யதேசத்து பெருமாள்கள் கருடசேவை 5-2-2019  அன்று மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. அருள்மிகு ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரின் அவதாரஸ்தலமும், ததீயாராதனை, வேடுபரி, மங்களாசாஸனம் முதலான ஸ்ரீ ஆழ்வாரின் வைபவங்கள் உள்ளடக்கிய லீலைகள் நிறைந்த திருநாங்கூர் கருடசேவை கண்டருளும்  திவ்யதேசங்களான, 1. திருக்காவளம்பாடி,  2. திருஅரிமேய விண்ணகரம், 3. திருவண்புருடோத்தமம், 4. திருச்செம்பொன்செய்கோயில், 5. திருமணிமாடக்கோயில்  (கருடசேவை நடைபெறும் திருக்கோயில்), 6. திருவைகுந்த விண்ணகரம், 7. திருத்தேவனார்த்தொகை, 8. திருத்தெற்றியம்பலம், 9. திருமணிக்கூடம்,  10. திருவெள்ளக்குளம், 11. திருப்பார்த்தான்பள்ளி ஆகிய  திருக்கோயில்களின் பெருமாள்கள், திருநாங்கூரிலுள்ள மணிமாடக்கோயில் அருள்மிகு நாராயணப் பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி, கருட சேவை வீதியுலா புறப்பாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்கள். இவ்விழ   ஏற்பட்டினை  விழக்குழுவினர் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருக்கிறார்கள்.படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன்- 9443171383 
திருநாங்கூரில் நடைபெற்ற 11 கருட சேவை
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com