துக்காச்சி சதுர்வேதி மங்கலம்

'துக்காச்சி சதுர்வேதி மங்கலம்’ என்ற இந்த ஊரில் அமைந்துள்ள இவ்வாலய மூலவர் கருவறை விமானம், தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில் கருவறை விமானத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை ஸ்ரீ சௌந்தர நாயகியம்மன் தென்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் முதல் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த துர்க்கை அம்மன், மற்ற ஆலயங்களில் உள்ளது போன்று வடக்கு நோக்கி அமைந்திராமல் தென்முகம் நோக்கி அருள்பாலித்து வந்திருக்கிறாள். மகாமண்டபத்தில் உலகின் முதலாம் சரப மூர்த்தியும் தென் திசை நோக்கி அருள் பாலித்து வந்திருக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் இன்றைய நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியா நிலையில் உள்ளது. காலத்தின் ஓட்டத்தினாலும், கலைகளின் மகத்துவம் அறியா சில மனுடராலும் மிகவும் சிதைந்து போன நிலையில் உள்ளது.  இக்கோயில் கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோயில் அருகிலுள்ளது. கோயிலை மீண்டும் புணரமைக்க நல்மனம் கொண்ட ஆன்மீக உள்ளங்கள் முயற்சியை நாடும் என்ற நம்பிக்கையில் நாம். தகவல் மற்றும் படங்கள் உதவி : குடந்தை ப.சரவணன் 9443171383
துக்காச்சி சதுர்வேதி மங்கலம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com