ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் புதிய ஃப்ரேம் அமைப்பைும், சஸ்பென்ஷனையும் பெற்று உள்ளது. எடையோ 109 கிலோ கொண்டது. வண்டியின் இருக்கை உயரம் 765 மி.மீ. ஆகவும், 5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் 109.19 சி.சி. சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு, 8 பி.எச்.பி. பவரையும், 9 என்.எம். டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. ஆக்டிவா 5ஜி மணிக்கு 83 கி.மீ. வேகம் வரை செல்லும் என தெரியவந்துள்ளது. இதன் முன்சக்கரத்திலும், பின்சக்கரத்திலும் 130 மி.மீ. டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டு, காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. முழுவதும் மெட்டல் பாடியான ஆக்டிவா 5ஜி-யில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இதன் ஸ்டான்டர்டு மாடல் ரூ.52,460 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீலக்ஸ் மாடல் ரூ.54,325 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.