தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சீர்காழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நீடாமங்கலத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.
வெள்ளக்கோவில், முத்தூர் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.
ஈரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கும், எம்.ஜி.ஆர்., உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவஞ்சலியை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில் மௌண அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.