ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் போட்டோக்கள் லீக்காகி வருகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.