பூஜையுடன் தொடங்கிய இந்தியன் II படப்பிடிப்பு - புகைப்படங்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
பூஜையுடன் மீண்டும் துவங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு.
பூஜையில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.
இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையில் நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர உள்பட பலர் கலந்து கொண்டனர்.
'இந்தியன் 2' படத்தை லைகா மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு.
இந்தியன் 2 பூஜை புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
கமல், சித்தார்த், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.