லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லியோ படத்தில் விஜய், திரிஷா நடித்திருந்தனர்.
இவர்களைத் தவிர்த்து அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. லோகேஷின் எல்சியூவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் உலகளவில் சுமார் ரூ.620 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான வாரிசு படத்தில், தொழில் போட்டிகள் மற்றும் குடும்பப் பிரச்னைகளுக்கு இடையே விஜய் எவ்வாறு தன் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை. கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தாலும் உலகளவில் சுமார் ரூ.302 முதல் ரூ.350 கோடி வசூலித்தது.
அப்பா - மகன் என இரட்டைக் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ள படம். ரூ.300 முதல் ரூ.305 கோடி வசூலித்து சாதனை படைத்த படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியதில் முதல்முறையாக விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் வெளியான இந்தப் படம் அதிரை வெற்றிபெற்றதுடன் ரூ.245 முதல் ரூ.260 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
மருத்துவம் வியாபாரமாவதற்கு எதிராகப் பொங்கியெழும் விஜய், அதற்கு எதிராக என்ன செய்தார் என்பதே மெர்சல் படத்தின் கதை. அட்லீயின் சமூக அதிரடி படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த வசூல் ரீதியாக ரூ.255 முதல் ரூ.259 கோடி வசூலித்தது.
தேர்தலில் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர வைத்த வெகுசன திரைப்படம். வசூல் ரீதியாக உலகம் முழுவதும் ரூ.260 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் இது. வசூல் ரீதியாக இந்த படம் ரூ.236 முதல் ரூ.253 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
அதிரடி காதல் திரைப்படம். இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஜி வி பிரகாஷ் குமார். வசூல் ரீதியாக ரூ.155 முதல் ரூ.170 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
ஸ்லீப்பர் செல்களைப் பற்றி தமிழில் பேச வைத்த முதல் தமிழ் திரைப்படம். வசூல் ரீதியாக ரூ.131 முதல் ரூ.160 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மேலும், விஜய்யின் முதல் ரூ.100 கோடி படம் என்ற சாதனையும் படைத்தது.
முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் இரட்டை வேடத்தில் ஆள்மாறாட்டக் கதை நடித்திருந்தார். விவசாயிகளுக்கும், கார்பரேட்டுக்குமான அரசியலை இந்தப் படத்தில் காட்டியிருந்தார் முருகதாஸ். இந்தப் படம் வசூல் ரீதியாக ரூ.129 முதல் ரூ.130 கோடி வசூலித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.