அமலா பால் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது புகைப்படங்களும் இணையதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு பகிரப்பட்டும் வருவதால் ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இவருக்கு பெருகி வருகின்றது.
கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட அமலாபால் மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமர' என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமனார்.
தமிழில் வீரசேகரன் மற்றும் சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்..
மைனா திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளையும் வாங்கிக் குவித்தார்.
தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, வேலையில்லா பட்டதாரி, ஆடை என தொடர் வெற்றி திரைப்படங்களில் தமிழில் நடித்து அசத்தினார்.
தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆடை திரைப்படத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையிலும், கோலிவுட்டே கொண்டாடியது.
சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருகிறார்.
ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங்களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.
தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா, புதிய வாய்ப்பை பெறவே இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் அமலா பால்.
தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாப்பாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது.
பிகினி உடை முதல் அனைத்து விதமான போட்டோக்களையும் வெளியிட்டு சர்ச்சை நாயகி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியான அமலா பால், தற்போது வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.