ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி - காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தடம் புரண்ட வடகிழக்கு விரைவு ரயிலின் பெட்டிகளை கிரேன் மூலம் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்ட பிறகு அகற்றப்பட்டது.
பக்ஸர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி-காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.
பக்ஸருக்கு அருகிலுள்ள ரகுநாத்பூர் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் மற்ற ரயில்களின் இயக்கம் தடைபட்டது.
தடம் புரண்டதற்கான காரணத்தை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், தடம் புரண்ட பெட்டிகளை கிரேன் மூலம் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பக்ஸர் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி - காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
தில்லி-காமாக்யா வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டதால் ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.