பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள் - புகைப்படங்கள்

'பாலிவுட் பாட்ஷா',  'கிங் கான்' என்று அழைக்கப்படும் ஷாருக்கான் 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 14 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.  படங்கள்: கோப்பு | இபிஎஸ்

Updated on
தில்லியில் 1965 நவம்பர் 2ஆம் தேதி பிறந்த ஷாருக் தனது வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளை மங்களூரில் கழித்தார். படங்கள்: கோப்பு

தில்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் படித்த போது ஹாக்கி மற்றும் கால்பந்து ஆட்டங்களில் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு தோள்பட்டை காயத்தால் விளையாட்டு வீரராகும் எண்ணத்தை அவர் கைவிட்டார்.

1980 களின் பிற்பகுதியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ஷாருக் கான், பிறகு வெள்ளித் திரையில் கால் பதித்தார். படங்கள்: ஷாருக் கான் இன்ஸ்டாகிராம் பக்கம்

அவரது தாயார் மறைவுக்கு பிறகு மும்பைக்கு குடிபெயர்ந்த ஷாருக்,  'தீவானா' படத்தில் நடித்தார். படத்தின் வெற்றியால் அவருக்கு  சிறந்த ஆண் அறிமுக நடிகர் என கெளரவித்தது பிலிம்பேர். படங்கள்: இன்ஸ்டாகிராம்

1992ல் நாயகனாக சமத்கார் படத்தின் நடிகை உர்மிளா உடன் நடித்தார். இதனைத் தொடர்ந்து 'தில் ஆஷ்னா ஹை' மற்றும் 'ராஜூ பன் கயா ஜென்டில்மேன்' படங்களில் நடித்து பிரபலமானார். படங்கள் : ஏபி

ஷாருக் கான் பெரும்பாலும் காதல் கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். 1995ஆம் ஆண்டில், வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 1997ல் 'தில் தோ பாகல் ஹை',  என வணிக ரீதியான வெற்றிப் படங்களை கொடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com