இந்திய கிரிக்கெட் அணியின் சார்பாக கடந்த 2016-17, 2017-18 என இரு சீசன்களுக்கான சிறந்த வீரர் விருது விராட் கோலிக்கு வழங்கி சிறப்பித்தது பிசிசிஐ. அதேபோல், மகளிர் கிரிக்கெட் அணியில் 2016-17 சீசனுக்கு ஹர்மன்பிரீத் கெளர், 2017-18 சீசனுக்கு ஸ்மிருதி மந்தானா ஆகியோர் சிறந்த வீராங்கனைகளுக்கான விருதுகளை பெற்றனர். இதில் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். தினேஷ் கார்த்திக் தனது மனைவி தீபிகா பல்லிகல் உடன் கலந்துகொண்டார். மேலும் இதில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நன்றி - பிசிசிஐ