காந்திஜியின் தமாஷ்கள் 

காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு மகாத்மாஜி வார்தா நோக்கி வந்ததிலும் ஒரு வேடிக்கை பண்ணி விட்டார்.
காந்திஜியின் தமாஷ்கள் 

காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு மகாத்மாஜி வார்தா நோக்கி வந்ததிலும் ஒரு வேடிக்கை பண்ணி விட்டார். வந்த பின்பு தலைவர்களைச் சந்தித்து வேடிக்கையாக அவர் பேசிய பேச்சுகளும் வெகு ருசிகரமானவை.
மகாத்மாவை சிவகிராமத்திலிருந்து அழைத்து வருவதற்காக சேத் பஜாஜ் ஒரு மாட்டு வண்டியை அனுப்பியிருந்தார். சுகமாக அதில் ஏறிக்கொண்டு அவர் வந்திருக்கக்கூடாதா? வழக்கமான மூங்கில் தடியை ஊன்றிக் கொண்டு தமது பரிவாரத்தில் இரண்டு, மூன்று பேர் சகிதம், வார்தாவுக்கு நடந்து செல்வதாகப் புறப்பட்டு விட்டார். இளங்காற்று அதிகமாயிருந்ததாம்! காலை ஆதவனின் இளங்கதிர்கள் மனோகரமாயிருந்ததாம்! ஆகவே, மகாத்மா தாம் நடந்தே செல்வதாய் சிவகிராமத்திலிருந்து புறப்பட்டுவிட்டார்.
வார்தாவில் பஜாஜ் வீட்டு வாசற்படியில் காலடி வைத்தாரோ இல்லையோ, எதிர்பார்த்தவர்கள் மீதெல்லாம் தமது தமாஷ் பாணங்களை வீசிக்கொண்டே வந்தார்.
பஜாஜுக்கு உறவினரான ஒரு கிழவி பங்களாவின் வராந்தாவில் ஒரு பெஞ்ச் மீது உட்கார்ந்திருந்தாள். மகாத்மா வருகிறாரே, மரியாதையாக நிற்போமென்று அந்தக் கிழவி எழுந்திருந்தாள். மகாத்மா அவளிடம் அணுகி ஏதோ ஹிந்தியில் தமாஷாகச் சொல்லி உட்காரச் சொல்லி விட்டார்.
உடனேஸ்ரீமதி சரோஜினி நாயுடு தமது அறையிலிருந்து ஓடி வந்தார். ஓ! இங்கே இன்னொரு கிழ மந்திரவாதி வருகிறாளே! என்று மகாத்மா கூறி தட்டிக் கொடுத்தார்.
மெளலானா அபுல்கலாம் ஆஸாத் வந்தார். உடனே அவரைப் பார்த்து மகாத்மா ஏது! இந்த வீட்டில் எல்லாம் கிழங்களாகவே கூடியிருக்கிறாப் போலிருக்கிறதே என்று கூறினார்.
ஸ்ரீ ஆஸாதா விட்டுக் கொடுப்பவர்? ஆமாம். கிழங்களாகயிருந்தாலும் நாங்கள் சந்தோஷமான குடும்பம் என்று கூறினார்.

தினமணி (07-07-1937)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com