கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

29.4.1976: தமிழ் நாட்டில் 6 லட்சம் பேருக்கு கு.க. ஆபரேஷன் செய்யத் திட்டம்

தமிழ் நாட்டில் 6 லட்சம் பேருக்கு கு.க. ஆபரேஷன் செய்யத் திட்டமிட்டிருப்பது பற்றி...

News image

29.4.1976 - Dinamani

Updated On :29 ஏப்ரல் 2026, 4:00 am IST

திருச்சி, ஏப். 28 - தமிழ் நாட்டில் நடப்பு ஆண்டில் முந்தைய ஆண்டை (1975-76) விட 2 மடங்கு அதாவது 6 லட்சம் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்கள் செய்யக் குறியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் புது டில்லியில் நடந்த சுகாதார, குடும்பக் கட்டுப்பாடு திட்ட கூட்ட கவுன்சிலில் 1976-77 குறியிலக்கு 1975-76ன் குறியிலக்கைவிட 2 மடங்காக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

தமிழ் நாட்டில் 40,000 பெண்களுக்கு கருத்தடை 'லூப்'களும் பொருத்தப்படும்.

1973-74-ல் தமிழ் நாட்டில் 1,10,015 பேருக்கு கருத்தடை ஆபரேஷன்கள் செய்யப்பட்டது. 1975-76-ல் இது 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றுமதிப்பிடப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ. 60 வழங்கப்படும்.

கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைக்கு லோக் சபையில் எதிர்ப்பு

புது டில்லி, ஏப். 28 - ஜனத்தொகை பற்றிய தேசீயக் கொள்கைக்கு லோக்சபையில் இன்று பொதுவாக ஆதரவு கிடைத்தது. சுகாதார, குடும்பக் கட்டுப்பாடு திட்ட இலாகா மானியக் கோரிக்கை மீது பேசிய பல உறுப்பினர்கள், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கையை வரவேற்றனர்.

ஆனால் இன்று பேசியவர்களில் பெரும்பாலோர் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் கட்டாயப்படுத்தும் அம்சம் இருக்கக் கூடாது என்றனர்.

நயமான முறைகளை கையாள்வதே சிலாக்கியம் என்றார்கள்.

குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம், அதற்கான முறைகள் பற்றி மக்களுக்கு சரிவர எடுத்துரைத்தால்தான், இந்தத் திட்டம் வெற்றியடையும் என்றார்கள். ...

Summary

Plan to perform family planning operations on 600,000 people in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.