புதுடில்லி, மே 6 - சிவில் விமான போக்குவரத்தையும், ரயில், ரோடு தொடர்பையும், ராஜ தந்திர உறவையும் மீண்டும் ஏற்படுத்துவது பற்றி இந்தியா, பாகிஸ்தான் பேச்சு மே 12 முதல 14 வரை இஸ்லாமாபாத்தில் நடக்கும்.
இந்திய கோஷ்டிக்கு வெளி நாட்டிலாகாக் காரியதரிசி ஜகத் மேத்தாவும், பாகிஸ்தான் தூது கோஷ்டிக்கு அதன் வெளி நாட்டிலாகாக் காரியதரிசி ஆகா சாஹியும் தலைமை வகிப்பார்கள். சிவில் விமான போக்குவரத்து, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து இலாகாக்களின் அதிகாரிகளும் அந்த தூது கோஷ்டிகளில் இருப்பார்கள்.
பிரதம மந்திரி இந்திரா காந்தியின் முயற்சியின் பேரில் இந்தப் பேச்சு நடக்கிறது. ஏப்ரல் 11-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவுக்கு எழுதிய கடிதத்தில், விமான போக்குவரத்து, ரயில், ரஸ்தா இணைப்பு, ராஜதந்திர உறவு ஏற்படுத்துதல் ஆகியவை பற்றி விவாதிக்க இந்தியா தயார் என இந்திரா காந்தி கூறியிருந்தார்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து ஸ்தாபனம் முன்புள்ள தன் வழக்கை வாபஸ் பெற பாகிஸ்தான் தயார் என குறிப்பிட்டு பூட்டோ எழுதிய கடிதத்துக்கு இந்திரா பதில் அனுப்பினார்.
லே-ஆப் அனுமதி, பெறுவதற்கான நடைமுறை
சென்னை, மே.6- தொழில் தகராறு விதிகளின் கீழ் தொழிலாளர்களை லே-ஆப் செய்யவும், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும், தொழில் நிறுவனத்தை மூடவும் அனுமதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது சம்பந்தமாக விரிவான நடைமுறையை தமிழ்நாடு சர்க்கார் அறிவித்திருக்கிறது.
உற்பத்தி புள்ளி விவரங்கள், முந்தைய 12 மாதங்களுக்கு மாத வாரியாக புள்ளி விவரம், உற்பத்தி சக்தி, வருடாந்திர உற்பத்தி, ஆர்டர் புத்தகங்களின் நிலவரம், வேலை நேரங்கள், ஷிப்ட்டுகள், ஆகியவை சம்பந்தமாக சுமார் 25 கேள்விகளுக்கு விவரமான பதில்களையும், விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ...
Summary
May 7, 1976: India-Pakistan Talks to be Held Next Week — Meeting in Islamabad
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிராகப் போர்! பாகிஸ்தான் மிரட்டல்

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்
சொந்த மக்களையே இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா. அவையில் இந்தியா கடும் தாக்கு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





