புளிச்ச ஏப்பம் வந்தா...

எப்போதாவது புளிச்ச ஏப்பம் வருவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் புளிப்பு கலந்த ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் உணவு ஜீரணமாகாமல்
Updated on
1 min read

எப்போதாவது புளிச்ச ஏப்பம் வருவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் புளிப்பு கலந்த ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் உணவு ஜீரணமாகாமல் புளித்த ஏப்பம் வந்தால் அது நோயின் அறிகுறி.

இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் உணவு ஜீரணிக்கும் தன்மை மட்டுப்படுகிறது. உடலில் எந்தவொரு பாகத்திலும் சுரப்பு நீர் தங்கிவிட்டால் கிருமிகள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துவிடும். இதனால் இரைப்பையில் உள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்தி துர்நாற்றத்துடன் ஏப்பம் வரத் தொடங்கும். இதுவே புளித்த ஏப்பம் என்கிறோம்.

தினமும் சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து ஏப்பம் வந்தால் உஷாராகிவிட வேண்டியதுதான். இரைப்பையில் அடைப்பு இருந்தால்தான் இதுபோன்ற ஏப்பம் வரும். இதைத்தான் புளித்த ஏப்பம் என்கிறோம். இந்த அடைப்பு புற்றுநோயாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எதுக்களிப்பது எதனால்?:   சிலருக்குச் சாப்பிட்ட உணவு சிறிது நேரத்திலேயே எதுக்களித்து வரும். நாம் சாப்பிடும் உணவு ஒரு வழிப் பாதையைப் போன்று உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குள் சென்றுவிட்டால் சாதாரணமாகத் திரும்பி வரக்கூடாது. அதுபோன்றுதான் நமது ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இரைப்பையில் உள்ள காரம், அமிலம், பித்தநீர் மேலே வந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

இதுபோன்ற அமிலங்கள் மேலே வருவதைத் தடுப்பதற்காக இரைப்பைக்கும், உணவுக்குழாய்க்கும் இடையே திரளான தசைப் பகுதி உள்ளது. இதுதான் உதரவிதானப் பகுதி. இது ஒரு வால்வு போன்று செயல்படுகிறது. இந்த தசைப் பகுதி பழுதுபடும்போது அமிலம் மேலே வந்து உணவுக் குழாயில் எச்சல், எதுக்களித்தல் ஏற்படுகிறது.

மது அருந்துதல், புகை பிடித்தல், அதிகக் காரம், அளவுக்கு மீறிய மசாலா, தலைவலி மாத்திரை ஆகியவற்றால் இத் தசைப் பகுதி பாதிக்கப்பட்டு எதுக்களிப்பு வரலாம். பிறக்கும்போது இயற்கையாகவே தசைப் பகுதி சயாக வேலை செய்யாமல் இருந்தால் எதுக்களிப்பு வரலாம். தொடர்ந்து எதுக்களிப்பு ஏற்பட்டால், உணவுப் பாதை பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com