நம் உடலில் சத்துகள் உறிஞ்சப்பட்டு உயிர் வேதியியல் மாற்றங்கள் நடக்கும்போது free radicals’ என்பவை உடலில் சேருகின்றன. இதை Oxidative Stress என்கிறோம்.
இந்த ப்ரீ ரேடிகல்ஸ் சர்க்கரை நோய், இதய நோய், கண் புரை, புற்று நோய் போன்ற நிலைகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையைக் கட்டுப்படுத்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.
பச்சைக் காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
உடல் பருமன்: உடல் பருமன் குறிப்பாக குழந்தைப் பருவம் மற்றும் வளர் இளம் பருவ ஆண், பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
இதனால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றுக்கு சிறு வயதிலேயே ஆளாகிறார்கள். இதற்குக் காரணம் உணவுக்கு ஏற்ற உழைப்பு இல்லாமை, அளவுக்கு அதிக உணவு, கொழுப்புச் சத்து மிகுந்த தின்பண்டங்கள், பொத்த உணவு, சிப்ஸ், பப்ஸ் போன்றவை சாப்பிடுவதே.
சமச்சீரான உணவு முறைகளை (அதாவது காய்கறிகள், பழங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு) சிறு வயதிலேயே பழக்கப்படுத்த வேண்டும்.
தொழில் சார்ந்த நோய்கள்:
சில துறைகளில் அன்றாட அலுவலகப் பணிகள் இன்று அதிக பணிச் சுமையுடனும், மன உளைச்சல் மிகுந்ததாகவும் உள்ளது. கம்ப்யூட்டர் துறை, சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணிகளில் உள்ளோருக்கு ஏற்ப உணவு முறைகள் பந்துரைக்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் துறைகளில் பணிபுவோர் அதிகம் பாதிக்கப்படுவது உடல் பருமன் பிரச்னையால்தான். பணிச்சுமையால் உணவைத் தவிர்ப்பது, ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பண்டங்களை சாப்பிடுவது, பாட்டில்களில் அடைக்கப்படும் குளிர் பானங்களைக் குடிப்பது, அதிகளவில் இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வது போன்றவைதான் இப் பிரச்னைக்கு முக்கியக் காரணம்.
அவர்களின் மன உளைச்சலைக் குறைக்க சமச்சீரான உணவுடன் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.