கருமுட்டை பை நீர்க்கட்டிகளுக்கு இயற்கையான தீர்வு என்ன?

கருமுட்டை பை நீர்க்கட்டிகள் என்பது, 20-35 வரை வயது உள்ள பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னை ஆகும். இந்த நோயின் இயற்கை மற்றும் நேரடியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.   எனினும் இந்த நோய் பெண்களின் உ
Updated on
2 min read

கருமுட்டை பை நீர்க்கட்டிகள் என்பது, 20-35 வரை வயது உள்ள பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னை ஆகும். இந்த நோயின் இயற்கை மற்றும் நேரடியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

  எனினும் இந்த நோய் பெண்களின் உடலில் இயற்கையாக சுரக்கப்பட வேண்டிய நாளாமில்லாச் சுரப்பிகளின் குறைபாட்டின் காரணமாக உண்டாகிறது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

  இந்த நாளாமில்லாச் சுரப்பிகளின் குறைபாட்டின் காரணமாக பெண்களின் உடலில் ஆன்ட்ரோஜன் எனும் வேதிப்பொருளின் சுரப்பு அதிகமாகிறது. இதன் விளைவாக இயற்கையாக நடைபெற வேண்டிய கருமுட்டை வளர்ச்சி தடைபடுகிறது மட்டுமல்லாமல், கருமுட்டைகள் நீர்க்கட்டிகளாக மாறுகின்றன. இந்த நிலைமை நீடிக்கும் போது கருமுட்டை பை முழுவதும் நீர்க்கட்டிகளாக மாறி முழு கருமுட்டை பையே கட்டிகளாக மாறுகிறது.

நோயின் அறிகுறிகள்: மாதவிலக்கில் குறைபாடு, உடல் எடை கூடுதல், உடலில் அதிக சர்க்கரை அளவு, தோலில் அதிக எண்ணெய் வழிதல், தலையில் அதிக பொடுகு, தோலில் தன்மை/நிறம் மாறுதல், உடல் முழுவதும் அதிகப்படியான முடி வளர்தல், இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

பக்க விளைவுகள்: அதிக கட்டுப்படுத்த முடியாத உடல் எடை அதிகரிப்பு, கருமுட்டை வளர்ச்சி தடைபடுதல், குழந்தைப் பேறு இல்லாமை, சர்க்கரை நோய், மனமாற்றம், மனச் சிதைவு ஆகிய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிகிச்சை முறைகள் மற்றும் பக்க விளைவுகள்: இந்த நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் ஹார்மோன் தெரப்பி பொதுவாக அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையை பின்பற்றும் போது மாதவிலக்கு குறைபாடுகள் குறையும்.

  ஆனால், நாளடைவில் கருமுட்டை வளர்ச்சி முழுமையாக தடைபடுவது மட்டுமின்றி உடலில் இந்த நோயை முழுமையாக இயற்கையான முறையில் குணப்படுத்த முடியாததாகிவிடும். இந்த சிகிச்சை முறை விலக்கப்படும் போது மீண்டும் மாதவிலக்கு மற்றும் மற்ற கோளாறுகள் தொடரும்.

ஆர்விட்டாவின் நிரந்தரத் தீர்வு: ஆர்விட்டா சிகிச்சை மையத்தில் நோயினுடைய காரணத்தை முழுமையாக ஆராய்ந்து ஒவ்வொருவருக்கும் அவருடைய வயது, நோயின் வயது, அறிகுறிகள், பக்க விளைவுகள், உடலின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து தனியான சிகிச்சைத் திட்டம் வகுக்கப்படுகிறது. இதனுடன் நவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு நோயின் தன்மை முழுமையாக ஆராயப்படுகிறது. ஆர்விட்டா மைய சிகிச்சைத் திட்டம் மூலமாக ஒவ்வொருவருக்கும் சிறப்பான, நம்பகமான மூலிகை மருத்துகள், தனிப்படுத்தப்பட்ட யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாட்டு வரைமுறைகள் ஒரோ சீரான விகிதத்தில் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என நோயின் அளவைக் கண்காணித்து திருத்தி அமைக்கப்படுகிறது.

 ஆர்விட்டா சிகிச்சை மையத்தின் தொடர் மற்றும் தனித்தன்மையான சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனை முறைகளின் மூலம் உடனே நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகள், பணிகள் சீராக்கப்படும். கருப்பை நீர்க் கட்டிகள் முழுமையாக நிரந்தரமாக

குணமடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com